» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை
சனி 25, செப்டம்பர் 2021 8:52:15 AM (IST)

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராத் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராத் கோலி 53 ரன்களுக்கும், படிக்ககல் 70 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெல் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கெய்க்வாட், டூ பிளெஸ்ஸி ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
கெய்க்வாட் 26 பந்துகளில் 38 ரன்களையும், டூ பிளெஸ்ஸி 26 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு வந்த மொயின் அலி 23 ரன்களுக்கு வெளியேற அம்பத்தி ராயுடு 32 ரன்களை எடுத்தார்.இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரெய்னா ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், தோனி 11 ரன்களையும் எடுத்ததன் மூலம் வெற்றி இலக்கான 157 ரன்களை சென்னை அணி எட்டியது. இதன் மூலம் 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)


