» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
வெள்ளி 7, ஜனவரி 2022 10:15:22 AM (IST)

இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 266 ரன்களும் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 240 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.
மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமானது. உணவு இடைவேளையும், தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டன. பின்னர் ஆட்டம் தொடங்கியவுடன் கேப்டன் டீன் எல்கரும், ராசி வாண்டர் டூசனும் பாட்னர்ஷிப்பை தொடர்ந்தனர். இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு படிப்படியாகக் குறைந்தது. 3-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில் டூசன் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார். இதனால், இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உருவானது.
ஆனால், அதன்பிறகும் எல்கர் மற்றும் தெம்பா பவுமா மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியால் மேற்கொண்டு விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் 96 ரன்களும், பவுமா 23 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துவது இதுவே முதல்முறை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவுகாத்தியில் அபார வெற்றி: இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா!
புதன் 26, நவம்பர் 2025 12:48:38 PM (IST)

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு!
புதன் 26, நவம்பர் 2025 11:53:24 AM (IST)

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)




