» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் படேலுக்கு ஐசிசி விருது!

செவ்வாய் 11, ஜனவரி 2022 11:26:42 AM (IST)

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அஜாஸ் படேல் டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் மயங்க் அகர்வால், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்தின் அஜாஸ் படேல் டிசம்பர் 2021 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பரில் வான்கடேயில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அஜாஸ் படேல் சரித்திரம் படைத்தார். ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்டில் அந்த சாதனையை எட்டிய 3-வது வீரர் ஆனார்.

இந்தியாவின் மயங்க் அகர்வால் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். 2 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதமும், 2 அரை சதமும் அடங்கும். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory