» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல் 2022: டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது!

செவ்வாய் 11, ஜனவரி 2022 5:26:52 PM (IST)

ஐபிஎல் 2022 தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை இந்தியாவின் பிரபல தொழில் குழுமமான டாடா கைப்பற்றியுள்ளது. 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து அதன் டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை பெறுவதற்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடைபெறும்.  ஐபிஎல் தொடங்கிய போது டி.எல்.எஃப், பெப்சி ஆகிய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சராக இருந்தன. இதன்பின் 2016-ல் இருந்து சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சராக இருந்து வந்தது. இதற்காக அந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.440 கோடி பிசிசிஐ-க்கு செலுத்தி வந்தது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையின் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் அந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விவோ நீக்கப்பட்டது.

அதற்கு பதில் ரூ.222 கோடிக்கு டிரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரானது. பின்னர் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்-லில் விவோ நிறுவனம் மீண்டும் உரிமத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory