» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா: தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல்!

புதன் 12, ஜனவரி 2022 11:30:54 AM (IST)

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் ஒருநாள் தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

22 வயது வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 1 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த மார்ச் மாதம் விளையாடினார். பிறகு காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை. சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், 148 ரன்களும் 16 விக்கெட்டுகளும் எடுத்தார். 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளார்கள். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வாஷிங்டன் சுந்தரால் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்ல முடியுமா என பிசிசிஐ யோசித்து வருகிறது. இதனால் ஒருநாள் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory