» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கேப்டவுன் டெஸ்டில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

வெள்ளி 14, ஜனவரி 2022 7:55:58 PM (IST)இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தன. 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 212 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 4-ம் நாள் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. ராசி வான்டர் டூசன் 22 ரன்களுடனும், தெம்பா பவுமா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இடைவேளைக்குப் பிறகு டூசனும், பவுமாவும் விக்கெட்டை இழக்காமல் வெற்றி இலக்கை அடையச் செய்தனர். 63.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் மூலம் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 41 ரன்களும், பவுமா 32 ரன்களும் எடுத்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory