» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கைப்பந்து போட்டி: சவேரியார்புரம் அணி வெற்றி!

திங்கள் 17, ஜனவரி 2022 12:00:43 PM (IST)சாத்தான்குளம்  அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சவேரியார்புரம் அணி முதல் பரிசை வென்றது. 

தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் அருகே உள்ள இளையனேரியில் பொங்கல் திருநாளையொட்டி கைப்பந்து போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது. இதில் சவேரியார்புரம், இளையனேரி, கலுங்குவிளை,  பேய்க்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் சவேரியார்புரம் அணியும், இளையனேரி அணியும் மோதின. இதில் சவேரியார்புரம் அணி வெற்றி பெற்றது. 

2ஆம் பரிசு இளையனேரி அணிக்கும், 3ஆம் பரிசு கலுங்குவிளை அணிக்கும் கிடைத்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நெடுஞ்சாலைத்துறை நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் கலந்து கொண்டு  முதலிடம்  பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7ஆயிரம் ரொக்கமும், 2ஆம் இடம் பெற்ற இளையனேரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம்  ரொக்கமும், 3ஆம் இடம் பெற்ற கலுஙகுவிளை அணிக்கு ரூ.3ஆயிரம் பரிசு வழங்கினார். விழாவில் ரீகன், சேவியர், ராஜா, பட்டுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory