» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நாசரேத் அருகே பொங்கல் விளையாட்டு விழா

திங்கள் 17, ஜனவரி 2022 12:04:49 PM (IST)



நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடம் காமராஜர் விளையாட்டு மைதானத்தில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இதில், கபடி, ஓட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், மியூசிக்கல் சேர், பானையில் தண்ணீர் ஊற்றுதல், ஊசியில் நூல் கோர்த்தல், முறுக்கு கடித்தல், பலூன் உடைத்தல் மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டிகளை வெள்ளத்துரை தலைமை வகித்து துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜின் குமார் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் பெருமாள், சுனை செல்வன், ஆறுமுக பெருமாள், கிங்ஸ்டன், ஸ்ரீராம், நாதன், கேபா, ஐபில், யோவான் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads






Tirunelveli Business Directory