» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக துாத்துக்குடி இன்ஜினியர் தேர்வு

செவ்வாய் 18, ஜனவரி 2022 5:20:11 PM (IST)

கால்பந்து போட்டிகளுக்கு தேசிய நடுவராக துாத்துக்குடியைச் சேர்ந்த  சாப்ட்வேர் இன்ஜினியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குவாலியரில் ஆல் இண்டியா புட்பால் பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான தேர்வுகள் பிட்னஸ் மற்றும் தியரி என்று இரண்டு பிரிவுகளாக நடந்தது. 

இதில் அகில இந்திய அளவில் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் கர்நாடாக ஸ்டேட் புட்பால் பெடரேஷன் சார்பில் துாத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்த பகவத்சுந்தர்ஜீ இரண்டு தேர்விலும் வெற்றிபெற்று தேசிய நடுவராக தேர்ச்சிபெற்றார். பகவத்சுந்தர்ஜீயின் தந்தை சிவசுப்பிரமணியன் ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.


மக்கள் கருத்து

தமிழன்Jan 19, 2022 - 09:40:57 PM | Posted IP 173.2*****

வாழ்த்துக்கள்.

கே.கணேசன்Jan 19, 2022 - 04:10:47 PM | Posted IP 162.1*****

அருமை. பாராட்டுக்கள். மேலும் பல வெற்றிகளை பெற நல் வாழ்த்துக்கள்.

கணேஷ்Jan 18, 2022 - 10:10:48 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

adaminJan 18, 2022 - 06:05:28 PM | Posted IP 108.1*****

semma

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads






Tirunelveli Business Directory