» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் ஹாக்கிக்கு புத்துயிர் அளிக்க முயற்சி: மாணவர்களுக்கு முன்னாள் வீரர்கள் பயிற்சி!
செவ்வாய் 18, ஜனவரி 2022 8:27:48 PM (IST)

தூத்துக்குடி மண்டலத்தில் ஹாக்கி விளையட்டிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு முன்னாள் வீரர்கள் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர் பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. இதுபோல் தூத்துக்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபலமாக இருந்த ஹாக்கி விளையாட்டு வீழ்ச்சியடைந்தது. இதனை மீட்டெடுக்கும் வகையில் முன்னாள் ஹாக்கி வீரர்கள் இணைந்து பிரேவ் வாரியர்ஸ் ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு குழுவினை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரேவ் வாரியர்ஸ் கிளப் நிர்வாகிகள் கூறுகையில், தூத்துக்குடியில் ஹாக்கியை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம். தற்போது 70பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். வ.உ.சி., கல்லூரி அணி, காமராஜ் கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளி அணிகளையும் உருவாக்கியுள்ளோம். உரிய முறையில் பயிற்சி அளித்து திறமையான வீரர்களை உருவாக்குவதே எங்களது நோக்கம்.

எங்களது முயற்சிக்கு தூத்துக்குடி துறைமுக ஹாக்கி விளையாட்டு வீரர்களும், வஉசி சிதம்பரனார் கல்லூரியின் முன்னாள் விளையாட்டு வீரர்களும், கோவில்பட்டி ஹாக்கி விரர்களும், தூத்துக்குடி எஸ்.ஏ.வி., மற்றும் சேவியர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர்களும், வளரும் ஹாக்கி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஹாக்கி மட்டை, பந்து மற்றும் ஹாக்கி மைதானத்தையும் செம்மைப்படுத்தி உதவி வழங்கி உள்ளார்கள்" என்று தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
saranJan 19, 2022 - 07:41:30 AM | Posted IP 162.1*****
best wishes
பாலமுருகன்Jan 18, 2022 - 09:34:51 PM | Posted IP 162.1*****
மேன் மேலும் வளர்ந்து சிறப்பான விரர்களை உருவாக்க வாழ்த்துக்கள்
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்: ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:23:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி முடிவுக்கு வந்ததா? விமர்சனங்களுக்கு கே.கே.ஆர் பயிற்சியாளர் பதிலடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:00:44 PM (IST)

தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

தோனி இல்லாத சிஎஸ்கே தடுமாற்றம்: வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:41:28 AM (IST)

ஐபிஎல் 2026 தொடரில் தோனி விளையாட மாட்டார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 11:13:33 AM (IST)

ஐபிஎல் 2026: சிஎஸ்கே போட்டிகள் முழு அட்டவணை: ஏப்ரல் 23-ல் மும்பையுடன் பலப்பரீட்சை!
வெள்ளி 27, மார்ச் 2026 11:09:53 AM (IST)


SANJAI SJan 20, 2022 - 06:45:10 PM | Posted IP 162.1*****