» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் : தூத்துக்குடி மாணவி சாதனை
வியாழன் 20, ஜனவரி 2022 10:45:37 AM (IST)
தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தூத்துக்குடியை சோ்ந்த மாணவி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழ முடிமண் கிராமத்தைச் சோ்ந்த ஜேசுதாஸ்-தாயம்மாள் தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீநிதி. புதியம்புத்தூா் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். தில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மாணவி ஸ்ரீநிதி, தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். சாதனை படைத்துள்ள மாணவி ஸ்ரீநிதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனா்.பதக்கங்கள் வென்ற மாணவி ஸ்ரீநிதி கூறுகையில்: 13 வயதில் இருந்தே சைக்கிள் போட்டியில் பங்கேற்று வருவதாகவும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ரூ. 5 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசு அளித்ததன் மூலம் பதக்கங்கள் வெல்ல உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தாா்.
மேலும், சாலைகளில் வைத்து நடைபெறும் சைக்கிள் போட்டியில் பயன்படுத்தப்படும் சைக்கிளுக்கும், மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பயன்படுத்தும் சைக்கிளுக்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது தன்னிடம் சாலையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடிய சைக்கிள் மட்டுமே உள்ளதாக தெரிவித்த மாணவி ஸ்ரீநிதி, மைதானத்தில் பயன்படுத்தக்கூடிய சைக்கிளை தனக்கு வழங்க அரசு முன் வந்தால் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தாா். ஆசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு தோ்வாகியுள்ள மாணவி ஸ்ரீநிதி அந்தப் போட்டியிலும் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைப்பாா் என அவரது தாய் தாயம்மாள் தெரிவித்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)


RaniJan 24, 2022 - 12:55:05 PM | Posted IP 162.1*****