» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இஷான் கிஷண், ஷ்ரேயாஸ் அதிரடி: முதல் டி20யில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

வெள்ளி 25, பிப்ரவரி 2022 3:31:08 PM (IST)



இஷான் கிஷன் 89 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுத்து அசத்த இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

லக்னெளவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பும்ரா, ஜடேஜா ஆகியோரும் களம் காண, சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. காயம் காரணமாக ருதுராஜ் இடம்பெறவில்லை. இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷனாவுக்குப் பதில் தினேஷ் சண்டிமல், ஜெஃப்ரி வாண்டர்சே இணைந்திருந்தனர்.

டாஸ் வென்ற இலங்கை பெளலிங்கை தேர்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44 ரன்கள் சேர்க்க, இஷான் கிஷண் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் விளாசினார். ஓவர்கள் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 57, ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பெளலிங்கில் லஹிரு குமாரா, டாசன் ஷனகா ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் விளாசியது. 

பின்னர் ஆடிய இலங்கை அணியில் சரித் அசலங்கா 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை போராட, துஷ்மந்தா சமீரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்கள் அடித்து துணை நின்றார். எனினும் முந்தைய பேட்டர்களில் பாதும் நிசங்கா டக் அவுட்டாக, கமில் மிஷாரா 13, ஜனித் லியனாகே 11, தினேஷ் சண்டிமல் 10, டாசன் ஷனகா 3, சமிகா கருணாரத்னே 21 ரன்களுக்கு வீழ்ந்தனர். இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இந்திய பெளலிங்கில் வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2, யுஜவேந்திர சஹல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 56 பந்துகளில் 89 குவித்த தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory