» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்!

செவ்வாய் 1, மார்ச் 2022 5:41:33 PM (IST)



பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின்  ஸ்மிரிதி மந்தனா நான்கு இடங்கள் முன்னேறி  8-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கவுர் (20வது ரேங்க்) மூன்று இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து உள்ளார்.

இந்த தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி முதல் இடத்திலும் அடுத்தபடியாக இந்திய அணியின் கேப்டன்  மிதாலி ராஜ் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து  நீடிக்கின்றனர். அதே போல் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின்  தீப்தி ஷர்மா 5வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 4வது இடத்தில் நீடிக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory