» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நூறாவது டெஸ்ட் போட்டி: விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து..!

வியாழன் 3, மார்ச் 2022 5:22:20 PM (IST)



நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நூறாவது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும். 145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 70 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் 71-வது வீரராக கோலி இணைகிறார். இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் 12-வது வீரர் ஆவார்.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை ருசித்து 2 ஆண்டுக்கு மேலாகி விட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அந்த நீண்ட கால ஏக்கத்தை சொந்த மண்ணில் தணிக்க இது அருமையான வாய்ப்பாகும். அது மட்டுமின்றி நூறாவது டெஸ்டில் இதுவரை 9 வீரர்கள் சதம் அடித்திருந்தாலும் அதில் ஒருவர் கூட இந்தியர் கிடையாது. எனவே இந்த டெஸ்டில் அவர் மூன்று இலக்கத்தை எட்டினால் செஞ்சூரி டெஸ்டில் செஞ்சுரி போட்ட முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கும் விராட் கோலிக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விராட் கோலிக்கு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பாக விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: 2007ஆம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது விராட் கோலியை பற்றி முதலில் கேள்விப்பட்டேன். அப்போதே விராட்கோலி திறமை பற்றி நிறைய பேர் பேச ஆரம்பித்துவிட்டனர். 

அண்டர் 19 உலக கோப்பையில் ஒரு வீரர் சிறப்பாக ஆடி வருவதாகவும் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அவரே சிறப்பாக விளையாட போகிறார்கள் என்றும் சக வீரர்கள் என்னிடம் கூறினார். இந்நிலையில் தற்போது விராட் கோலி நூறாவது டெஸ்டில் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் தற்போது வளர்ந்து வரும் பல இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை என்று பாராட்டிப் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory