» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 15வது சீசன் அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை - கொல்கத்தா மோதல்!

திங்கள் 7, மார்ச் 2022 12:40:33 PM (IST)

ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 26ம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முழுவதுமாக மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே நடத்தப்படவுள்ளன. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் உள்ள நான்கு மைதானங்கள் இதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. வான்கடே மைதானத்தில் 20, பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 15, DY பாட்டீல் ஸ்டேடியத்தில் 20, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான கஹுஞ்சே மைதானத்தில் 15 என மும்பை மற்றும் நவி மும்பையில் மொத்தம் 55 போட்டிகளும் மற்றும் புனேவில் 15 போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

இவை அனைத்தும் லீக் போட்டிகள் மட்டுமே. பிளே-ஆப் சுற்று போட்டிகள் நடக்கும் மைதானங்கள் தொடர்பாக எந்த தகவலையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடவில்லை. இதனிடையே, மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் நடப்பாண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26 தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மறுநாள், டெல்லி அணியை மும்பை அணி பிரபோர்ன் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள உள்ளது.

லீக் போட்டிகளில் இறுதி ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மே 22 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், ஒருநாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் முதல் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும், இரண்டாவதுபோட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரேபோட்டி இருக்கும் பட்சத்தில் அது இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி அட்டவணை

No. Date Match Time (IST) Venue
1 Mar-26 சென்னை vs கொல்கத்தா 7:30 PM Wankhede Stadium
2 Mar-27 டெல்லி vs மும்பை 3:30 PM Brabourne – CCI
3 Mar-27 பஞ்சாப் vs பெங்களூர் 7:30 PM DY Patil Stadium
4 Mar-28 குஜராத் vs லக்னோ 7:30 PM Wankhede Stadium
5 Mar-29 ஐதராபாத் vs ராஜஸ்தான்  7:30 PM MCA Stadium, Pune
6 Mar-30 பெங்களூர் vs கொல்கத்தா 7:30 PM DY Patil Stadium
7 Mar-31 லக்னோ vs சென்னை 7:30 PM Brabourne – CCI
8 Apr-1 கொல்கத்தா vs பஞ்சாப் 7:30 PM Wankhede Stadium
9 Apr-2 மும்பை vs ராஜஸ்தான்  3:30 PM DY Patil Stadium
10 Apr-2 குஜராத் vs டெல்லி 7:30 PM MCA Stadium, Pune
11 Apr-3 சென்னை vs பஞ்சாப் 7:30 PM Brabourne – CCI
12 Apr-4 ஐதராபாத் vs லக்னோ 7:30 PM DY Patil Stadium
13 Apr-5 ராஜஸ்தான் vs பெங்களூர் 7:30 PM Wankhede Stadium
14 Apr-6 கொல்கத்தா vs மும்பை 7:30 PM MCA Stadium, Pune
15 Apr-7 லக்னோ vs டெல்லி 7:30 PM DY Patil Stadium
16 Apr-8 பஞ்சாப் vs குஜராத் 7:30 PM Brabourne – CCI
17 Apr-9 சென்னை vs ஐதராபாத் 3:30 PM DY Patil Stadium
18 Apr-9 பெங்களூர் vs மும்பை 7:30 PM MCA Stadium, Pune
19 Apr-10 கொல்கத்தா vs டெல்லி 3:30 PM Brabourne – CCI
20 Apr-10 ராஜஸ்தான்vs லக்னோ 7:30 PM Wankhede Stadium
21 Apr-11 ஐதராபாத் vs குஜராத் 7:30 PM DY Patil Stadium
22 Apr-12 சென்னை vs பெங்களூர் 7:30 PM DY Patil Stadium
23 Apr-13 மும்பை vs பஞ்சாப் 7:30 PM MCA Stadium, Pune
24 Apr-14 ராஜஸ்தான்vs குஜராத் 7:30 PM DY Patil Stadium
25 Apr-15 ஐதராபாத் vs கொல்கத்தா 7:30 PM Brabourne – CCI
26 Apr-16 மும்பை vs லக்னோ 3:30 PM Brabourne – CCI
27 Apr-16 டெல்லி vs பெங்களூர் 7:30 PM Wankhede Stadium
28 Apr-17 பஞ்சாப் vs ஐதராபாத் 3:30 PM Brabourne – CCI
29 Apr-17 குஜராத் vs சென்னை 7:30 PM MCA Stadium, Pune
30 Apr-18 ராஜஸ்தான்vs கொல்கத்தா 7:30 PM Brabourne – CCI
31 Apr-19 லக்னோ vs பெங்களூர் 7:30 PM DY Patil Stadium
32 Apr-20 டெல்லி vs பஞ்சாப் 7:30 PM MCA Stadium, Pune
33 Apr-21 மும்பை vs சென்னை 7:30 PM DY Patil Stadium
34 Apr-22 டெல்லி vs ராஜஸ்தான் 7:30 PM MCA Stadium, Pune
35 Apr-23 கொல்கத்தா vs குஜராத் 3:30 PM DY Patil Stadium
36 Apr-23 பெங்களூர் vs ஐதராபாத் 7:30 PM Brabourne – CCI
37 Apr-24 லக்னோ vs மும்பை 7:30 PM Wankhede Stadium
38 Apr-25 பஞ்சாப் vs சென்னை 7:30 PM Wankhede Stadium
39 Apr-26 பெங்களூர் vs ராஜஸ்தான் 7:30 PM MCA Stadium, Pune
40 Apr-27 குஜராத் vs ஐதராபாத் 7:30 PM Wankhede Stadium
41 Apr-28 டெல்லி vs கொல்கத்தா 7:30 PM Wankhede Stadium
42 Apr-29 பஞ்சாப் vs லக்னோ 7:30 PM MCA Stadium, Pune
43 Apr-30 குஜராத் vs பெங்களூர் 3:30 PM Brabourne – CCI
44 Apr-30 ராஜஸ்தான்vs மும்பை 7:30 PM DY Patil Stadium
45 May-1 டெல்லி vs லக்னோ 3:30 PM Wankhede Stadium
46 May-1 ஐதராபாத் vs சென்னை 7:30 PM MCA Stadium, Pune
47 May-2 கொல்கத்தா vs ராஜஸ்தான்  7:30 PM Wankhede Stadium
48 May-3 குஜராத் vs பஞ்சாப் 7:30 PM DY Patil Stadium
49 May-4 பெங்களூர் vs சென்னை 7:30 PM MCA Stadium, Pune
50 May-5 டெல்லி vs ஐதராபாத் 7:30 PM Brabourne – CCI
51 May-6 குஜராத் vs மும்பை 7:30 PM Brabourne – CCI
52 May-7 பஞ்சாப் vs ராஜஸ்தான்  3:30 PM Wankhede Stadium
53 May-7 லக்னோ vs கொல்கத்தா 3:30 PM MCA Stadium, Pune
54 May-8 ஐதராபாத் vs பெங்களூர் 3:30 PM Wankhede Stadium
55 May-8 சென்னை vs டெல்லி 3:30 PM DY Patil Stadium
56 May-9 மும்பை vs கொல்கத்தா 7:30 PM DY Patil Stadium
57 May-10 லக்னோ vs குஜராத் 7:30 PM MCA Stadium, Pune
58 May-11 ராஜஸ்தான்vs டெல்லி 7:30 PM DY Patil Stadium
59 May-12 சென்னை vs மும்பை 7:30 PM Wankhede Stadium
60 May-13 பெங்களூர் vs பஞ்சாப் 7:30 PM Brabourne – CCI
61 May-14 கொல்கத்தா vs ஐதராபாத் 7:30 PM MCA Stadium, Pune
62 May-15 சென்னை vs குஜராத் 3:30 PM Wankhede Stadium
63 May-15 லக்னோ vs ராஜஸ்தான்  7:30 PM Brabourne – CCI
64 May-16 பஞ்சாப் vs டெல்லி 7:30 PM DY Patil Stadium
65 May-17 மும்பை vs ஐதராபாத் 7:30 PM Wankhede Stadium
66 May-18 கொல்கத்தா vs லக்னோ 7:30 PM DY Patil Stadium
67 May-19 பெங்களூர் vs குஜராத் 7:30 PM Wankhede Stadium
68 May-20 ராஜஸ்தான்vs சென்னை 7:30 PM Brabourne – CCI
69 May-21 மும்பை vs டெல்லி 7:30 PM Wankhede Stadium
70 May-22 ஐதராபாத் vs பஞ்சாப் 7:30 PM Wankhede Stadium
இந்தமுறை ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் என இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. குஜராத் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், லக்னோ அணி கேஎல் ராகுல் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. மார்ச் 28ம் தேதி நடக்கும் போட்டியில் இந்த இரு அணிகளும் முதல்முறையாக எதிர்கொள்ளவுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory