» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆல்ரவுண்டர் ஜடேஜா முதலிடம்!

புதன் 9, மார்ச் 2022 3:40:11 PM (IST)



ஐசிசி  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நெ.1 ஆல்ரவுண்டராக முன்னேறியுள்ளார் ரவிந்திர ஜடேஜா.

இலங்கைக்கு எதிராக மொஹலியில் விளையாடிய டெஸ்டில் 175* ரன்கள் எடுத்ததோடு, 9 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஜடேஜா. இதையடுத்து ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இரு படிகள் முன்னேறி முதல் இடத்தை அடைந்துள்ளார்.

2017 ஆகஸ்டில் ஒரு வாரத்துக்கு நெ.1 ஆல்ரவுண்டராக இருந்த ஜடேஜா ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை அடைந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹோல்டர் 2-ம் இடத்திலும் அஸ்வின் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ஆல்ரவுண்டர்கள் தரவரிசை

1. ஜடேஜா
2. ஹோல்டர்
3. அஸ்வின் 
4. ஷகில் அல் ஹசன்
5. பென் ஸ்டோக்ஸ்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory