» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே நேரத்தில் 4பேருடன் செஸ்: 18 கியூப்களை இணைத்து பள்ளி மாணவர்கள் சாதனை

செவ்வாய் 15, மார்ச் 2022 8:05:24 AM (IST)

தூத்துக்குடியில், ஒரே நேரத்தில் 4பேருடன் செஸ் மற்றும் 18 நிமிடங்களில் 8 கியூப்களையும் சேர்த்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தூத்துக்குடி மறவன்மடத்தைச் சேர்ந்த மாணவர் விக்டர் நோவா, புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த கோமதி மகள் மேகலா, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோது, கியூப் விளையாட்டை கற்று கொண்டனர்.

ஏற்கனவே, செஸ் விளையாடுவதில் ஆர்வமிக்க இவர்கள் உலக சாதனை முயற்சியாக, ஒரே நேரத்தில் 4 வீரர்களுடன் செஸ் விளையாடிக் கொண்டே கூம்பு வடிவிலான 8 கியூப்களையும் ஒரே வண்ணத்தில் சேர்க்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று மாணவர் விக்டர் நோவா, மாணவி கோமதி ஆகிய 2 பேரும் உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 4 வீரர்களுடன் செஸ் போட்டியில் பங்கேற்றவாறே, 18 நிமிடங்களில் 8 கியூப்களையும் ஒரே வண்ணத்தில் சேர்த்தனர். இதையடுத்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர், மாணவியை அனைவரும் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory