» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் இரு தமிழக வீரர்கள் : ஆளுநர் தமிழிசை வாழ்த்து

புதன் 11, மே 2022 5:35:52 PM (IST)

இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த கார்த்தி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேலும் தான் அந்த இரண்டு வீரர்கள்.

இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியாவில் வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. இது 11-வது ஆசிய கோப்பை தொடராகும். மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தில் இந்த தொடரில் களம் காண்கிறது இந்தியா. 5 முறை இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தத் தொடருக்கான அணியில்தான் கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் தேர்வாகியுள்ளனர்.

13 ஆண்டுகால தேடல்: சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சீனியர் ஆடவர் ஹாக்கி அணியில் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர். கடைசியாக தமிழகத்தை சேர்ந்த குணசேகர் மற்றும் நவீன் 2009-இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடி இருந்தனர். அதன் பிறகு இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கவில்லை. இப்போது அந்த காத்திருப்பு கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் முற்றுப் பெற்றுள்ளது.

இதில் கார்த்தி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 20 வயதான அவர் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். முன்கள (Forward) வீரர். "அணியில் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை அறிந்ததும் கொஞ்சம் பதற்றமாக உணர்ந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார். 21 வயதான மாரீஸ்வரன், மிட்ஃபீல்டர். இந்திய அணியை ரூபிந்தர் பால் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார். வீரர்கள் இருவரையும் தமிழ்நாடு ஹாக்கி பிரிவு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆசிய ஹாக்கி போட்டி இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஆசிய ஹாக்கி போட்டி இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்கள் திரு. மாரீஸ்வரன் மற்றும் திரு. கார்த்திக் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி பல சாதனைகள் படைத்து இந்திய நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory