» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மில்லர் - ஹர்திக் பாண்டியா அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத்!!

புதன் 25, மே 2022 10:53:11 AM (IST)ஐபிஎல் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளேஆஃப் சுற்றில் முதல் குவாலிபையர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், புள்ளிகள் பட்டியில் முதல் இரு இடங்களைப் பிடித்த குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக பட்லர் 89 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, கேப்டன் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய மில்லர் 68 ரன்களும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இப்போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ராஜஸ்தான் அணி மோதவுள்ளது. இதனால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி பெங்களூருவா? லக்னோவா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory