» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய ஜூனியர் ஆக்கி: உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் அரை இறுதிக்கு தகுதி!

வியாழன் 26, மே 2022 7:22:31 AM (IST)

தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் உத்தரபிரதேசம், சண்டிகர் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று கால் இறுதி போட்டிகள் நடந்தது. முதலாவது கால் இறுதி போட்டியில் உத்தரபிரதேச அணி 6-1 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகனாக உத்தரபிரதேச அணி வீரர் சர்தானந்த திவாரி தேர்வு செய்யப்பட்டார்.

2-வது கால் இறுதி போட்டியில் சண்டிகர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணியை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது. ஆட்டநாயகனாக சண்டிகர் அணி வீரர் ராமன் தேர்வானார். 3-வது கால் இறுதி போட்டியில் ஹரியானா அணி 13-1 என்ற கோல் கணக்கில் அருணாசலபிரதேச அணியை துவம்சம் செய்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory