» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் 4-வது முறையாக 600 ரன்கள்: கே.எல். ராகுல் புதிய சாதனை!

வியாழன் 26, மே 2022 3:48:18 PM (IST)ஐபிஎல் போட்டிகளில் 4-வது முறையாக 600 ரன்கள் குவித்து கே.எல். ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார். 

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ரஜத் படிதாரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. 

208 ரன்கள் இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.  அணியின் வெற்றிக்காக போராடிய கேப்டன் கே எல் ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ரன்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ரன்கள் குவித்துள்ளார். 

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4 சீசன்களில் 600 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் 626 ரன்கள், 2020-ஆம் ஆண்டில் 670 ரன்கள் மற்றும் 2018-ஆம் ஆண்டில் 659 ரன்களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019-ஆம் ஆண்டும் மட்டும் 593 ரன்கள் எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் 600 ரன்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory