» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம்: பிரக்ஞானந்தா சாதனை!
வெள்ளி 27, மே 2022 12:21:35 PM (IST)
செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டி தொடரில் 2வது இடம் பிடித்து பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.

இதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா சீன வீரர் டிங் லிரனை சந்தித்தார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது.
இதை தொடர்ந்து டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் சிறிய தவறினால் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
