» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பட்லர் அதிரடி சதம்: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியது ராஜஸ்தான்!

சனி 28, மே 2022 8:21:45 AM (IST)பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் நடப்பு தொடரின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 19வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.ராஜஸ்தான் அணியின் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் ராஜஸ்தான் மோதவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory