» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன்: சகவீரரின் மனைவி அதிரடி!
சனி 28, மே 2022 3:59:28 PM (IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா ஜோஸ் பட்லரை தனது 2வது கணவராக ஏற்றுக்கொண்டதாக கேலி செய்தார்.
 
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர்-ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சந்தங்கள் அடங்கும். பட்லரின் பேட்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது. முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பட்லர் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.  நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். 60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 இந்த போட்டியில் ஒவ்வொரு முறையும் பட்லர் ஒரு பெரிய ஷாட்டை அடிக்கும் போது அல்லது ஒரு மைல்கல்லை அடையும் போது, கேமிரா வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை மையமாக காட்டும். அப்போது கேமிராவில் சிக்குவது சகவீரர் ரஸ்ஸி வான் டெர் டசென் மனைவி லாராவாம். பல ரசிகர்கள் லாராவை ஜோஸ் பட்லரின் மனைவி என்று தவறாக நினைக்கிறார்கள். ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவியான லாரா ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
 லாரா ஐபிஎல் போட்டிகளை யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தன்ஸ்ரீ வர்மாவுடன் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்துவதை அடிக்கடி பார்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா ஜோஸ் பட்லரை தனது இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டதாக கேலி செய்தார். பட்லரின் மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த வாரம் ஐபிஎல்லின் பயோ-பப்பில் அவருடன் இணைந்தனர்.
 இதுகுறித்து லாரா கூறியதாவது: நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன். மேலும் தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிகுதிக்கிறோம் எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அத்னால் ஒருவேளை நான் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக நினைத்துக்கொண்டிருக்கலாம், இது மிகவும் சுவாரஸ்யமானது.
 ரஸ்ஸி ஐபிஎல்லில் அதிகம் விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை. அதனால் ஜோசுக்கான உற்சாகத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்பேன் என கூறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் ரூ.1 கோடியில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஸ்ஸி, இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2வது தகுதிச் சுற்றில் அவர் விளையாடவில்லை.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:13:32 PM (IST)

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்
புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)




