» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டிகள்: மதுரை, தாயில்பட்டி அணிகள் வெற்றி

வியாழன் 9, ஜூன் 2022 4:57:30 PM (IST)



படர்ந்தபுளியில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில்மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், ஆண்கள் அணியில் தாயில்பட்டி அணியும் வெற்றிபெற்றன.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம்மற்றும் கனரா வங்கி சார்பில் 17-வது ஆண்டு மாநில அளவிலானஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடந்தது. கனரா வங்கி மண்டல உதவி பொது மேலாளர் ஜக்கலா சுரேந்திர பாபு தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 16 அணிகள், ஆண்கள் பிரிவில் 25 அணிகள் என மொத்தம் 41 அணிகள் கலந்து கொண்டன. ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் தாயில்பட்டி கைப்பந்து கழக அணிமுதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், 3-ம் இடத்தை படர்ந்தபுளி லியா கைப்பந்து கழகஅணியும், 4-ம் இடத்தை அருப்புக்கோட்டை பீனிக்ஸ் கைப்பந்து கழக அணியும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும், 3-ம் இடத்தை மங்கலம் செயின்ட் மேரிஸ் கைப்பந்தாட்டம் கழக அணியும், 4-ம் இடத்தை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி கைப்பந்து கழக அணியும் பெற்றன.



கனரா வங்கி மண்டல மேலாளர் ரவீந்திர ஜேம்ஸ், மருத்துவர் விஜய், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ் குமார், முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் மங்கலஜெயபால், உடற்கல்வி இயக்குநர்கள் ஹரிஹர ராமச்சந்திரன், ஆல்ட்ரின், அதிசயராஜ், மாரி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை லியா கைப்பந்து கழகம் மற்றும் படர்ந்தபுளி கிராம மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory