» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஹார்திக் பாண்டியா கேப்டன்
வியாழன் 16, ஜூன் 2022 10:39:22 AM (IST)
அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்து செல்கிறது. அங்கு ஜூன் 26 மற்றும் ஜூன் 28-ல் இரண்டு ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வீரர்கள் டி20 தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் கேப்டனாக வழிநடத்தும் ரிஷப் பந்த் பெயர்கள் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி: ஹார்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)

ஜெய்ஸ்வால் அபார சதம் : தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இந்தியா!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:02:16 AM (IST)

ருதுராஜ், கோலி சதம் வீண் : 359 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய தென் ஆப்பிரிக்கா!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:47:32 AM (IST)


