» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: பார்படாஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:19:04 PM (IST)காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

பிர்மிங்கமில் நடைபெற்ற இந்தியா - பார்படோஸ் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பார்படோஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

ஷஃபாலி வர்மா 43 ரன்களும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும் எடுத்தார்கள். பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா முதலிடமும் இந்தியா 2-ம் இடமும் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory