» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நீளம் தாண்டுதலில் இந்தியா வெள்ளிப் பதக்கம் : பிரதமர் மோடி வாழ்த்து!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 12:11:11 PM (IST)காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, காமன்வெல்த், பாரா-பளுதூக்குதலில் இந்தியாவின் சுதீர், தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் மொத்தம் 134.5 புள்ளிகளை பெற்ற நிலையில் தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "காமன்வெல்த் போட்டியில் எம்.ஸ்ரீசங்கரின் வெள்ளி பதக்கம் வென்றது சிறப்பு வாய்ந்தது. பல தசாப்தங்களுக்கு பிறகு ஆடவர் நீளம் தாண்டுதலில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. அவரது ஆட்டம் இந்திய தடகளத்தின் எதிர்காலத்திற்கு நல்லது. வரும் காலங்களிலும் அவர் சிறந்து விளங்க அவருக்கு வாழ்த்துகள்." என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில்,"காமன்வெல்த், பாரா போட்டியில் சுதீரின் பதக்க எண்ணிக்கைக்கு சிறப்பான தொடக்கம்! அவர் ஒரு மதிப்புமிக்க தங்கத்தை வென்றதன் மூலம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை மீண்டும் காட்டியுள்ளார். தொடர்ந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இனிவரும் அனைத்து முயற்சிகளுக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்." என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory