» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் 2ஆம் இடம்!

திங்கள் 8, ஆகஸ்ட் 2022 8:30:48 AM (IST)மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 

சர்வதேச டி20 சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 

மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 3வது இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை இந்திய அணிக்  கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory