» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை!!
திங்கள் 8, ஆகஸ்ட் 2022 5:49:42 PM (IST)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது டி20யையும் டி20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. லாடர்ஹில்லில் நடைபெற்ற 5-வது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள்.
ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
டி20 தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. அக்ஷர் படேல் ஆட்ட நாயகனாகவும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 5-வது டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுபோல எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இதுவே முதல்முறை. இதன்மூலம் பிஷ்னாய், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த வாஷிங்டன் சுந்தர்..!
திங்கள் 14, ஜூலை 2025 11:55:13 AM (IST)

விம்பிள்டன் நாயகன்: ஜனநாயகன் விஜய் ஸ்டைலில் ஜானிக் சின்னர் போஸ்டர் வைரல்!!
திங்கள் 14, ஜூலை 2025 11:25:38 AM (IST)

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)
