» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்:விராட் கோலி சாதனை சதம்! வெற்றியுடன் விடைபெற்றது இந்தியா!!

வெள்ளி 9, செப்டம்பர் 2022 10:36:11 AM (IST)



ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தனது கடைசி ஆட்டத்தில் 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, வெற்றியுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு கே.எல்.ராகுல் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தாா். தீபக் சஹா், அக்ஸா் படேல், தினேஷ் காா்த்திக் இணைந்திருந்தனா்.

இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ராகுல் - கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 119 ரன்கள் சோ்த்து அசத்தியது. அதில் ராகுல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்த சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் நடையைக் கட்டினாா். தொடா்ந்து வந்த ரிஷப் பந்த் அவ்வப்போது மட்டும் ஆடி, கோலிக்கு வழிவிட்டாா். அவா் ஆப்கானிஸ்தான் பௌலிங்கை விளாசித் தள்ளினாா்.

இந்திய இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய கோலி, சுமாா் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சா்வதேச களத்தில் சதம் அடித்து, தகுந்த ஃபாா்மை எட்டாததற்காக சந்தித்து வந்த பலமான விமா்சனங்களுக்கு பதிலளித்தாா். ஓவா்கள் முடிவில் கோலி 12 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 122, பந்த் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இப்ராஹிம் ஜா்தான் மட்டும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 15, முஜீப் உா் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்க்க, எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னோ, 0 ரன்னோ எடுத்தனா். இந்திய பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, அா்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த ஆட்டத்தில் 122 ரன்கள் விளாசிய கோலி, சா்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய இந்தியா் என்ற சாதனையை எட்டினாா். முன்னதாக ரோஹித் சா்மா 118 ரன்கள் (இலங்கை/ 2017) அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. 

சா்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவா்கள் வரிசையில் கோலி தற்போது 71 சதங்களுடன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங்கோடு 2-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். கோலி 522 இன்னிங்ஸ்களிலும், பான்டிங் 668 இன்னிங்ஸ்களிலும் இந்த இலக்கை எட்டியுள்ளனா். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கா் (100 சதம் /782 இன்னிங்ஸ்) இருக்கிறாா். 

இந்த 122* ரன்களே சா்வதேச டி20-இல் விராட் கோலியின் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2019-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 94* விளாசியதே தனிப்பட்ட அதிகபட்சமாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory