» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன்: நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை!

வெள்ளி 9, செப்டம்பர் 2022 4:23:12 PM (IST)



சுவிட்சர்லாந்தில் நடநது வரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். அப்போது காயமடைந்ததால், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் காயத்திலிருந்து மீண்டு கடும் பயிற்சி மேற்கொண்ட நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டில் 90 மீ தூரம் வீசுவதே தனது இலக்கு என்றார். அதற்காக கடுமையாகவும் உழைத்தார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தடகள தொடரில் ஈட்டி எறிதல் ஃபைனலில், முதல் த்ரோவை ஃபவுலாக வீசிய நீரஜ் சோப்ரா, 2வது முயற்சியில் செம கம்பேக் கொடுத்த நீரஜ் சோப்ரா, 88.44மீ தூரம் வீசினார். அதன்பின்னர் கடைசி 2 முயற்சிகளிலும் அதைவிட குறைவான தூரமே வீசினார் என்றாலும், 88.44 மீ தூரம் வீசியதால் சாம்பியன் பட்டம் வென்றார். டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory