» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அற்புதமான நினைவுகளுக்கு நன்றி: பெடரர் ஓய்வு முடிவு சச்சின் உருக்கம்
வெள்ளி 16, செப்டம்பர் 2022 5:23:19 PM (IST)

ஓய்வு அறிவித்துள்ள பிரபல டென்னிஸ் வீரர் பெடரருக்கு சச்சின், நடால் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். 41 வயதான இவர் 8 விம்பிள்டன் உள்பட 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெற்றுள்ளார். தொடர்ச்சியாக 237 வாரங்கள் உள்பட 310 வாரங்கள் சர்வதேச டென்னிசில் நம்பர் 1 இடத்தை வகித்துள்ளார். காயம் காரணமாக பல மாதங்களாக டென்னிசில் இருந்து விலகி இருந்த பெடரர் அடுத்த வாரம் நடைபெற உள்ள லேவர் கோப்பை தொடருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பெடரருக்கு பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரபேல் நடால் உருக்கமான வாழ்த்து செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்புள்ள ரோஜர், நீங்கள் எனது நண்பர் மற்றும் போட்டியாளர். இந்த நாள் வரக்கூடாது என்று நான் விரும்பினேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் இது ஒரு சோகமான நாள். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பாக்கியம், மகிழ்ச்சி. என்னால் மறக்க முடியாத பல காவிய போட்டிகளில் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
எதிர்காலத்தில் நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள இன்னும் பல தருணங்கள் இருக்கும். ஒன்றாகச் செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. அது நமக்கு தெரியும். இப்போது உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். உங்களை லண்டனில் சந்திக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
ரூ.1041 கோடி சம்பாதித்த பெடரர்
பெடரர் டென்னிஸ் மூலம் பரிசுத் தொகையாக 130.5 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளார். இந்திய மதிப்பில் இது 1041 கோடி ரூபாய். இந்த தொகையானது, சாம்பியன் பட்டங்கள் வென்றதன் மூலம் மட்டுமே. இதுதவிர, வணிக ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரம் மூலம் பெடரர் பெற்ற கூடுதல் வருமானங்கள் சேர்க்கப்படவில்லை. ஜோகோவிச் 158.9 மில்லியன், நடால் 131.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதுவரை சம்பாதித்துள்ளனர்.
டெண்டுல்கர் வாழ்த்து
பெடரர் ஓய்வு பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் பதிவில், ”என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர். உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் நேசித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)
