» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியில் தினேஷ் கார்த்திக்!!
செவ்வாய் 20, செப்டம்பர் 2022 10:17:16 AM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்.
37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த முறை தொடர்ச்சியாக பல்வேறு டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் தவறாமல் இடம்பெற்று இருந்தார். அதன் பலனாக அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய வெளிர் நீல வண்ணத்திலான ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தினேஷ் கார்த்திக்கும் புதிய ஜெர்சி அணிந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார். அதை தான் இப்போது அவர் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

டி20 உலகக் கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:12:49 PM (IST)

