» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்ககள்: ஸ்மிருதி மந்தனா சாதனை
வியாழன் 22, செப்டம்பர் 2022 10:39:53 AM (IST)

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இரண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவர் 88 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினார். ஆனால் ஸ்மிருதி மந்தனா 76 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். இதனால் மகளிர் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றார்.
ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது ஷிகர் தவான், விராட் கோலிக்கு பிறகு ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றுள்ளார். ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் 3 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டினர். ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டில் 22 வீராங்கனைகள் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். இதில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை பெலின்டா கிளார்க் (62 போட்டிகள்), இடண்டாவது இடத்தை மெக் லேன்னிங் (64 போட்டிகள்) ஆகியோர் பெற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

