» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டாம் லதம் - வில்லியம்சன் அபாரம் இந்திய இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி!
வெள்ளி 25, நவம்பர் 2022 3:06:33 PM (IST)
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆக்லாந்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவனும் ஷிப்மன் கில்லும் இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். 10 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்த இந்திய அணி, 20 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. தவன் 63 பந்துகளிலும் ஷுப்மன் கில் 64 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள்.
65 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார் ஷுப்மன் கில். அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவன், 77 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஃபெர்குசன் வீசிய 33-வது ஓவரில் ரிஷப் பந்த் 15 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். அப்போது 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. இதன்பிறகு ஷ்ரேயர் ஐயரும் சஞ்சு சாம்சனும் நல்ல கூட்டணி அமைந்தார்கள். சஞ்சு சாம்சன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், இந்திய அணி 300 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக அமைந்தார். சிறப்பாக விளையாடிய ஷ்ரேயர் ஐயர் 76 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 80 ரன்களுக்குக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து அசத்தினார்.
நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 22 ரன்களிலும் கான்வே 24 ரன்களிலும் டேரில் மிட்செல் 11 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த வில்லியம்சனும் டாம் லதமும் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்ட டாம் லதம், 76 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் எடுத்தார். இருவர் கூட்டணி 200 ரன்களை எடுத்ததால் இந்திய அணி தடுமாறியது.
கூடுதல் பந்துவீச்சாளர் இல்லாததால் செய்வதறியாது தவித்தது. கடைசியில் 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. டாம் லதம் 145, வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 27.2 ஓவர்களில் 221 ரன்கள் கூட்டணி அமைத்து நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவினார்கள். ஆட்ட நாயகன் விருதை டாம் லதம் வென்றார். 2-வது ஒருநாள் ஆட்டம் ஞாயிறன்று ஹேமில்டனில் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)
