» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசல்: ருதுராஜ் கெயிக்வாட் புதிய சாதனை!
திங்கள் 28, நவம்பர் 2022 4:30:10 PM (IST)

விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து ருதுராஜ் சாதனை படைத்தார்.
உத்தரப் பிரதேச அணி - மஹாராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் இன்றைய ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். 109 பந்துகளில் சதமடித்த ருதுராஜ், 138 பந்துகளில் 150 ரன்களைப் பூர்த்தி செய்தார். அதற்குப் பிறகு இன்னும் அதிரடியாக விளையாடிய 153 பந்துகளில் இரட்டைச் சதமெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஷிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7 சிக்ஸர்களைத் தொடச்சியாக அடித்து சாதனை செய்தார் ருதுராஜ்.
அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டதால் 7-வது சிக்ஸரை அடிக்கும் வாய்ப்பு ருதுராஜுக்குக் கிடைத்தது. கடைசியில் 159 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 220 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். மஹாஷ்டிர அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. முதல் 109 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ருதுராஜ் அதற்குப் பிறகு 50 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 120 ரன்களைக் குவித்தார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு இரட்டைச் சதம், 5 சதங்கள் அடித்துள்ளார் ருதுராஜ்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2026: தொடக்கப் போட்டிகளில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:17:37 PM (IST)

சிஎஸ்கே-வில் சஞ்சு சாம்சன்: 11-ஆம் எண் ஜெர்சியுடன் களமிறங்குகிறார்!
வியாழன் 19, மார்ச் 2026 5:17:25 PM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: பிசிசிஐ விளக்கம்!
சனி 14, மார்ச் 2026 11:10:49 AM (IST)

வாழ்த்துப் பதிவில் சஞ்சு சாம்சன் நீக்கம்: சர்ச்சையில் சிக்கிய ஷுப்மன் கில்!
சனி 14, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு!
வெள்ளி 13, மார்ச் 2026 12:28:11 PM (IST)

ஐபிஎல் 2026: மார்ச் 12-ல் முதற்கட்ட அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:18:07 PM (IST)

