» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் போட்டியிலிருந்து பிராவோ ஓய்வு : சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்
வெள்ளி 2, டிசம்பர் 2022 4:41:42 PM (IST)

ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்த பிராவோ ஓய்வு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றவர் 39 வயது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராவோ. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 91 டி20 ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளும் ஐபிஎல் போட்டியில் 161 ஆட்டங்களில் 183 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
2008 முதல் 2017 தவிர அனைத்து வருட ஐபிஎல் போட்டிகளிலும் பிராவோ விளையாடியுள்ளார். 2011-ல் சிஎஸ்கே அணிக்குத் தேர்வானார். இரு வருட தடையின்போது 2016, 2017-ல் குஜராத் அணிக்காக விளையாடினார். பிறகு 2018-ல் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பினார்.
டிசம்பர் 23 அன்று கொச்சியில் ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது. கடந்த வருட அணியிலிருந்து தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமீபத்தில் அனைத்து அணிகளும் அறிவித்தன. சிஎஸ்கே அணி பிராவோவை விடுவித்தது. கடந்த வருடம் அவரை ஏலத்தில் ரூ. 4.40 கோடிக்குத் தேர்வு செய்தது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து பிராவோ ஓய்வு பெற்றுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் என்கிற புதிய பொறுப்பை பிராவோவுக்கு அளித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அப்பொறுப்பில் இருந்த முன்னாள் வீரர் எல். பாலாஜி சொந்தக் காரணங்களுக்காக ஒரு வருடம் விடுமுறை எடுத்துக்கொண்டுள்ளார். எனினும் சூப்பர் கிங்ஸ் அகாதெமியில் தனது பணிகளை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக 144 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிராவோ, 168 விக்கெட்டுகளும் 1556 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றதில் 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் பிராவோவின் பங்களிப்பு இருந்துள்ளது. 2010-ல் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றபோது மும்பை அணியில் இருந்தார் பிராவோ. 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு: வெற்றியுடன் முடித்த ஆஸ்திரேலியா!
வியாழன் 28, செப்டம்பர் 2023 12:31:31 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 300+ ரன்கள் குவிப்பு: புதிய வரலாறு படைத்த நேபாளம் அணி
புதன் 27, செப்டம்பர் 2023 11:48:13 AM (IST)

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
புதன் 27, செப்டம்பர் 2023 11:03:52 AM (IST)

தூத்துக்குடியில், 7-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 8:23:14 AM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 11:37:29 AM (IST)

ஒருநாள் போட்டிகளில் 3000+ சிக்ஸர்கள் : இந்திய அணி வரலாற்றுச் சாதனை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:44:33 PM (IST)
