» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷுப்மன் கில் அதிரடி சதம்: தொடரை கைப்பற்றியது இந்தியா!

வியாழன் 2, பிப்ரவரி 2023 11:00:36 AM (IST)



நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் பேட்டிங், பெளலிங்கில் அசத்திய இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

நியூசிலாந்து அணி இந்தியவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடியது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3-0 என அசத்தல் வெற்றி பெற்றது. அடுத்து டி20 போட்டியில் முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. 2வது டி20யில் இந்தியா வென்றது. அதனால் 3வது டி20 முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 234 ரன்களை குவித்தது. வழக்கம்போல இஷான் கிஷன் மோசமான தொடக்கத்தை அளித்தார். ஆனால் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். (4*12, 6*7). த்ரிப்பாதி 44 ரன்களும், ஹார்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர். 

இமாலய இலக்கை விரட்ட அவசரம்காட்டி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. பின்னர் வந்த பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 13 ரன்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 12.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை மட்டுமே எடுத்தனர்.  168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

இந்திய அணி சார்பில் ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.  ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் மற்றும் தொடர் நாயகனாக கேப்டன் ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory