» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் : சாத்தான்குளம் மாணவன் அசத்தல்!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:52:08 AM (IST)

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் மாணவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் . இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி. சுரேஷ்குமார் செயல்பட்டார்.
இதில் தமிழ்நாடு சார்பாக தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் ஆரோன் ஜெபஸ் என்கின்ற மாணவன் 15 வயதுக்குட்பட்டோருக்கான கட்டா பிரிவில் தங்க பதக்கத்தை வென்றான். வெற்றி பெற்ற மாணவனை திருவைகுண்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு
செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST)

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!
செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!
திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST)

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி!
திங்கள் 27, மார்ச் 2023 11:25:32 AM (IST)

கோலி, ஹர்திக் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸி!
வியாழன் 23, மார்ச் 2023 10:50:07 AM (IST)
