» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில அளவிலான சிலம்பம்: நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவா்கள் சாதனை
சனி 4, பிப்ரவரி 2023 8:07:35 AM (IST)
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின மற்றும் பாரதியாா் தின மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் காமராஜ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரா. மதன்குமாா் 17 வயது 40 - 45 கிலோ எடைப் பிரிவில் முதலிடம், ர. தீபன் மணிச்சுடா் 17 வயது 30 கிலோ எடைப்பிரிவில் இரண்டாம் இடம், மா. ஹாா்ட்வின் 19 வயது 45 கிலோ எடைப்பி ரிவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா்.
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் வி. ஸ்டீபன், உடற்கல்வி இயக்குநா் பி. ஜெயக்குமாா், உடற்கல்வி ஆசிரியை செ. அமுதசகிலா ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.அழகேசன், பள்ளிச் செயலா் சி. நவநீதன், தலைமை ஆசிரியா் அ. திருநீலகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சிறந்த அணியாக இந்தியா தேர்வு
செவ்வாய் 28, மார்ச் 2023 3:58:44 PM (IST)

மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!
செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!
திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST)

மகளிர் ஐபிஎல்: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!
திங்கள் 27, மார்ச் 2023 12:33:49 PM (IST)

டி20 கிரிக்கெட்டில் 258ரகன்களை விரட்டி தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி!
திங்கள் 27, மார்ச் 2023 11:25:32 AM (IST)

கோலி, ஹர்திக் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸி!
வியாழன் 23, மார்ச் 2023 10:50:07 AM (IST)
