» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை: இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!
சனி 4, பிப்ரவரி 2023 11:23:44 AM (IST)
சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீரர்களின் உயர்மட்ட செயல் திறன்களால் 36,300 ரேங்கிங் புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கஜகஸ்தான் 48,100 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 37,600 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. குத்துச்சண்டையில் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா 4-வது இடத்தையும், கியூபா 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.
உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற உலகளாவிய போட்டிகளில் முதல் 5 இடங்களுக்குள் தொடர்ந்து இடம்பிடித்ததன் வாயிலாக இந்திய குத்துச்சண்டை சமீபத்திய ஆண்டுகளில் முன்னோடியில்லாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு காமன்வெல்த் விளையாட்டில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 16 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 2008 முதல் சர்வதேச போட்டிகளில் 140 பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் இந்தியகுத்துச்சண்டை வீரர்கள், வீராங்கனைகள் 16 எலைட் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளனர். வரும்மார்ச் 15 முதல் 26-ம் தேதி வரை பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பை இந்திய குத்துச்சண்டை சங்கம் நடத்த உள்ளது. இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறஉள்ளது இது 3-வது முறையாகும்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டிருப்பது பெரிய சாதனைமிக்க தருணம். சில ஆண்டுகளுக்கு முன்பு 44 -வது இடத்தில் இருந்தோம். தற்போது அங்கிருந்து மூன்றாவது இடத்திற்கு, இந்திய குத்துச்சண்டை ஒரு மாபெரும் பாய்ச்சலை எடுத்துள்ளது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனம், இந்தியாவை குத்துச்சண்டை அதிகார மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைத்து வருகிறது. குத்துச்சண்டையில் இந்தியாவின் விரைவான வளர்ச்சியை இந்த தரவரிசை சுட்டிக்காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்: கேசவ் மகராஜ் வரலாற்று சாதனை!!
திங்கள் 30, ஜூன் 2025 12:39:44 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!
வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)
