» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தானுக்கு வராவிட்டால் இந்திய அணி மீது நடவடிக்கை: ஜாவித் மியான்டட் கோரிக்கை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:43:25 PM (IST)



பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் இந்தியா மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாக். முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் வலியுறுத்தியுள்ளார். 

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. நான் இதை எப்போதும் சொல்லி வருகிறேன். எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை இருக்கிறது. இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலையாகும். அப்படி செய்யவில்லை என்றால் ஐ.சி.சி.யால் எந்த அர்த்தமும் இல்லை. 

ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு எல்லா அணிகளும் செல்ல வேண்டும். எல்லா நாட்டுக்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அணிகள் விளையாட மறுத்தால் அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஐ.சி.சி. அவர்களை நீக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா பயப்படுவது ஏன்? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியும். பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் ஐ.சி.சி. தலையிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜாவித் மியான்டட் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

அங்கே என்ன சத்தம்?Feb 8, 2023 - 10:44:32 AM | Posted IP 162.1*****

இந்த கால ஐ.சி.சி. கிரிக்கெட் எல்லாம் துட்டுக்காக மட்டுமே நடத்துகிறது, பாகிஸ்தான்ல வரவில்லை என்றால் மூடிட்டு இருடா பண்ணி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory