» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு: பண்ட் தக்கவைப்பு...!
திங்கள் 27, மார்ச் 2023 4:30:23 PM (IST)

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த வருடத்துக்கான (2022-2023) வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது. இதில், வீரர்களின் திறமைக்கேற்ப ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து சம்பளம் வழங்கப்படுகிறது.
இதில் ஏ + பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருட (அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை) வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஏ+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, காயத்தால் ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.
பிரிவு ஏ+ ( ரூ. 7 கோடி) - ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா.
பிரிவு ஏ- (ரூ. 5 கோடி) ஹர்த்திக் பாண்ட்யா, தமிழக வீரர் அஷ்வின், முகமது ஷமி, கார் விபத்தில் சிக்கி தற்போது கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல் ஆகிய 5 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பிரிவு பி (ரூ. 3 கோடி) - செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பிரிவு சி (ரூ. 1 கோடி) - உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)
