» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய ஆக்கிப் போட்டிகள்: லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி அணி வெற்றி

செவ்வாய் 23, மே 2023 4:29:41 PM (IST)



கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஆக்கிப் போட்டியின் நேற்றை லீக்  ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி அணி வெற்றி பெற்றது.

கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

5-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 16-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வெற்றிப் பெற்றது.

17-வது லீக் ஆட்டத்தில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் மோதின. இதில் 8:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பாங்க் அணி வெற்றிப் பெற்றது. 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் புனே கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றிப் பெற்றது.

இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணி மற்றும் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கிஆகிய அணிகள் இரவு மோதுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory