» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!
சனி 27, மே 2023 10:32:55 AM (IST)
மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி, இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோத உள்ளது.
குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடி மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், மும்பை அணியின் பந்துவீச்சைப் சிதறடித்து 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசினார்.
அவருக்கு துணையாக நின்ற சாய் சுதர்ஷன் 43, கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்களை குஜராத் பேட்டர்கள் குவித்தனர். தொடர்ந்து, மாபெரும் இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, வதேரா அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முனைப்பில் அதிரடி காட்டினர். 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா, ரஷித் கான் சூழலில் வீழ்ந்தார்.
அடுத்து லிட்டில் பந்தில் கிரீன் அவுட்டாக, சிறிது அதிரடி காட்டிய சூர்யகுமார் 61 ரன்களில் மோகித் சர்மா பந்தில் போல்டானார்.தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மும்பை அணி ஆல் அவுட்டானது.சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
