» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மின்னொளி கபடி போட்டி: கூடங்குளம் அணி வெற்றி

திங்கள் 29, மே 2023 3:18:15 PM (IST)



சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு புனித கன்னிமரியாவின் இருதய மாதா ஆலய திருவிழாவையொட்டி சிவந்திமலர் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஒருநாள் மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது.

இதில் கூடங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, ஆத்திக்காடு, தட்டார்மடம், கன்னியாகுமரி, நெல்லை, மீரான்குளம், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. முதல் நாள் போட்டியை சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளரும், முதலூர் ஊராட்சித் தலைவருமான பொன்முருகேசன் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் கூடன்குளம் அணியும், மீரான்குளம் அணியும் மோதின. 

இதில் கூடங்குளம் அணி வென்று முதல் பரிசும், மீரான்குளம் அணி 2-ம் பரிசும், நெல்லை சுரேஷ் பிரதர்ஸ் அணி 3-ம் பரிசும், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணி 4-ம் பரிசும் பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற கூடங்குளம் அணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய ரூ. 25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, கிராம கமிட்டித் தலைவர் முத்துராஜ் ஆகியோர் வழங்கினர்.

2-ம் பரிசு பெற்ற மீரான்குளம் அணிக்கு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்முருகேசன் ரூ. 15 ஆயிரம் வழங்கினார். 3-ம் பரிசு பெற்ற நெல்லை சுரேஷ் பிரதர்ஸ் அணிக்கு ரூ. 10 ஆயிரத்தை மாவட்ட தி.மு.க. பிரதிநிதி லட்சுமண சுபாஷ் வழங்கினார். 4-ம் பரிசு பெற்ற மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணிக்கு ரூ. 10 ஆயிரத்தை தொழிலதிபர் தபசுமணி வழங்கினார்.

தொடர் நாயகன் கோப்பையை திராவிட செல்வன், சிறந்த கேட்ச ருக்கான கோப்பையை மாவட்ட தி.மு.க. தொழல்நுட்ப அணி துணை அமைப்பாளர் திவாகர்சாம் ஆகியோர் வழங்கினர். இதில் ஜெயக்குமார், ஜீவராஜ், ஜெயசீலன், பட்டுத்துரை, முத்துப்பாண்டி, வேல்துரை, பாக்கிய செல்வன், கிறிஸ்டோ பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிவந்தி மலர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் முத்துராஜ், ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory