» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒருநாள் போட்டிகளில் 3000+ சிக்ஸர்கள் : இந்திய அணி வரலாற்றுச் சாதனை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:44:33 PM (IST)

ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 24) இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியின்போது இந்திய அணி,ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது. நேற்றையப் போட்டியில் மட்டும் இந்திய அணி 18 சிக்ஸர்களை விளாசியிருந்தது.
ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகளைக் காணலாம்.
ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்
இந்தியா - 3007+ சிக்ஸர்கள்
மே.இ.தீவுகள் - 2953+ சிக்ஸர்கள்
பாகிஸ்தான் - 2566+ சிக்ஸர்கள்
ஆஸ்திரேலியா - 2476+ சிக்ஸர்கள்
நியூசிலாந்து - 2387+ சிக்ஸர்கள்
இங்கிலாந்து - 2032+ சிக்ஸர்கள்
தென்னாப்பிரிக்கா - 1947+ சிக்ஸர்கள்
இலங்கை - 1779+ சிக்ஸர்கள்
ஜிம்பாப்வே - 1303+ சிக்ஸர்கள்
வங்கதேசம் - 959+ சிக்ஸர்கள்
ஆப்கானிஸ்தான் - 671+ சிக்ஸர்கள்
அயர்லாந்து - 611+ சிக்ஸர்கள்
ஸ்காட்லாந்து - 425+ சிக்ஸர்கள்
ஐக்கிய அரபு அமீரகம் - 387+ சிக்ஸர்கள்
நெதர்லாந்து - 307+ சிக்ஸர்கள்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
