» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றி!

சனி 8, ஜூன் 2024 12:20:17 PM (IST)



டி20 உலகக் கோப்பையில் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்கதேச அணி த்ரில் வெற்றிபெற்றது.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். 

அவரை தவிர மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இல்லங்கள் வீரர்கள் குசல் மெண்டிஸ் (10 ரன்கள்), கமிந்து மெண்டிஸ் (4 ரன்), ஹசரங்கா (0) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி சார்பில் முஷ்தபிஜூர் ரஹ்மான், ரிஷாத் ஹுசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச வீரர்களுக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினர். ஓப்பனிங் வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன், சவுமியா சர்கார் டக் அவுட் என வெளியேறினர். இதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - தவ்ஹித் ஹிரிடோய் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது.

11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். லிட்டன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது வெளியேறினார். அவர் அவுட்டாகும் போது வங்கதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.

10 ரன்களுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை முனைப்பு காட்டியது. ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்கதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இலங்கையின் நுவான் துஷாரா 4 விக்கெட் வீழ்த்தினார். அது, பயனில்லாமல் போனது.

நடப்பு தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் தற்போது வங்கதேசத்திடம் தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory