» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த நேபாளம்!

சனி 15, ஜூன் 2024 12:20:43 PM (IST)



டி20 உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 1 ரன் வித்தியாசத்தில் நேபாள அணி தோற்றது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் 31ஆவது ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நேபாளம் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 115/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீஜா ஹெண்ட்ரிக்ஸ் 43 ரன்கள், ஸ்டப்ஸ் 27 ரன்கள் எடுத்தார்.

நேபாளம் சார்பில் குஷால் புர்டேல் 4 விக்கெட்டுகளும் திபேந்திர சிங் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.அடுத்து விளையாடிய நேபாளம் அணியின் தொடக்க வீரர் ஆசிஃப் ஷெயிக் 42 ரன்கள் எடுத்தார். அனில் ஷா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 2 பந்துகளில் ரன் ஏதும் இல்லை. 3ஆவது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்து ரன் இல்லை. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவையாக இருக்கும்போது ரன் அவுட் ஆகி தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேபாளம் இந்த்ப் போட்டியில் வென்றிருந்தால் சூப்பர் 8 வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மீதமிருக்கும் ஒரு போட்டியில் வென்றாலும் பலனில்லை. ஆனால் தெ.ஆ. போன்ற வலுவான அணியிடன் போராடி தோற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தெ,ஆ. வீரர் ஷம்ஸி 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory